ஸ்டாலின் சைக்கிள் விலை இவ்வளவா? வெறும் 1 கி.மீ தொலைவுக்கு 40 கார் - காண்டாகும் அண்ணாமலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

ஸ்டாலின் சைக்கிள் விலை இவ்வளவா? வெறும் 1 கி.மீ தொலைவுக்கு 40 கார் - காண்டாகும் அண்ணாமலை

ஸ்டாலின் சைக்கிள் விலை இவ்வளவா? வெறும் 1 கி.மீ தொலைவுக்கு 40 கார் - காண்டாகும் அண்ணாமலை




முதல்வர் ஸ்டாலினின் சைக்கிள் பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் நடக்கவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக உள்ளாட்சிகளுக்கு வரும் 80% நலத்திட்டங்கள் ஒன்றிய அரசிடம் இருந்துதான் வருகிறது என்பதை சுட்டிக்காட்டும் பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வருகிறார்.
அந்த வகையில் விழுப்புரத்தில் பரப்புரையில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் செய்தியாளர்கள் பேசினார். அப்போது அவர் கூறியதாவது '' திமுகவின் நான்கு மாத கால ஆட்சியின் சாதனை என்னவென்று சொல்கிறேன் கேளுங்கள்; ஈசிஆர் சாலையில் ரூபாய் 2.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிளில் ஸ்டாலின் போனதுதான். அது நீங்களோ அல்லது நானோ போகும் சாதாரண சைக்கிள் கிடையாது.

அந்த சைக்கிளின் விலை 2.5 லட்சம் ரூபாய். வெறும் ஒரு கிலோ மீட்டர் வரை சைக்கிளிங் போகிற அவருக்கு 2000 போலீஸ் செக்யூரிட்டி. சைக்கிளுக்கு முன்னாடி 40 கார், பின்னாடி 40 கார். ஒரு முதல்வர் இப்படி சைக்கிளில் போகிறார் என்றால் மக்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து அவரை நம்பி விடுவார்கள் என்று நம்மளை ஏமாற்ற முயற்ச்சிக்கும் வேலைதான் இது.

No comments:

Post a Comment

Post Top Ad