கடைசி ஆசையில் கண்டிஷன் போட்ட ஜெ..! சசிகலா வெளியிட்ட ரகசியம்... - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

கடைசி ஆசையில் கண்டிஷன் போட்ட ஜெ..! சசிகலா வெளியிட்ட ரகசியம்...

கடைசி ஆசையில் கண்டிஷன் போட்ட ஜெ..! சசிகலா வெளியிட்ட ரகசியம்...



முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு எங்கு செல்ல ஆசைப்பட்டார் என்பதை குறித்த தகவல்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக, கடந்த 2016 செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 72 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஜெயலலிதாவின் நினைவுநாளாக டிசம்பர் 5ம் தேதி அனுசரிக்கப்பட்டு வந்தாலும் டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே மாரடைப்பு ஏற்பட்டு ஜெயலலிதா இறந்துவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் அப்போது வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பும், பின்பும் என்ன நடந்திருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி எதுவும் இல்லை.

இருப்பினும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதுவும் சிந்துபாத் தொடரை போல நீடிக்கப்பட்டே செல்கிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் கடைசி ஆசையை குறித்து 'நமது எம்ஜிஆர்' நாளிதழில் சசிகலா கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, '' இதய தெய்வம் அம்மா குணமடைந்து வந்ததால் அப்போலோ மருத்துவமனையில் இருந்து 19.12.2016 அன்று போயஸ்கார்டன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விடலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால், நான் நேரடியாக கொடநாடு தான் போவேன் என்று மருத்துவர்களிடம் அம்மா சொன்னார். அதற்கு மருத்துவர்கள், அங்கு குளிர் அதிகமாக இருக்கும். நாங்கள் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவதும் கடினமாக இருக்கும்.அதனால் எங்களுக்காக ஒரு மாதமாவது சென்னையிலேயே இருங்கள். அதன்பிறகு கொடநாடு செல்லலாம் என்று அறிவுறுத்தினார்கள். அதற்கு அம்மா, ''இங்கே நான் தான் பாஸ்'' என்று மருத்துவர்களிடம் கூறினார்'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கொடநாடு கொள்ளை, கொலை விவகாரம் பூதாகாரமாகியுள்ள நிலையில், ஜெயலலிதா இறப்பதற்கு முன்னரும் கொடநாடு பங்களாவுக்கு செல்ல விரும்பியிருப்பது எதனால் என்ற கேள்விகள் எழுகின்றன.


No comments:

Post a Comment

Post Top Ad