நேற்று: இனி பாமக ஆட்சிதான், இன்று: அதிமுகவில் இணைந்த பாமகவினர்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

நேற்று: இனி பாமக ஆட்சிதான், இன்று: அதிமுகவில் இணைந்த பாமகவினர்..!

நேற்று: இனி பாமக ஆட்சிதான், இன்று: அதிமுகவில் இணைந்த பாமகவினர்..!




திமுக,பா.ம.க கட்சிகளில் இருந்து இருந்து விலகி 237 பேர் அதிமுகவில் இனைந்தனர்
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நேற்று பரப்புரையில் ஈடுபட்ட பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 54 ஆண்டுகாலம் இரு கட்சிகளும் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்கிறது. அவர்கள் ஆட்சி செய்தது போதும்.
இனி பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும். நாம் ஆளுவதற்கான நேரம் வந்துவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது வேறு யாரோ ஆட்சி செய்வதற்கு அல்ல நாம் ஆட்சி செய்யவே என்று தொண்டர்களுக்கு மத்தியில் சர்வெடியாக பேசினார்.இந்த நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் பாமகவைச் சேர்ந்த 237 பேர் திமுக, பாமக ,உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது: தர்மபுரி மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளது.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக ஆகும்.தமிழகத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி வருகிறது.பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், மாவட்ட மாவட்ட பொருளாளர் நல்லத் தம்பி, ஒன்றிய கழக செயலாளர்கள் விஸ்வநாதன், மதிவாணன், சேகர்,பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர்.முருகன்,சாலூர் பால்சொசைட்டிதலைவர் வேடியப்பன், கூட்டுறவு சங்கத் தலைவர் வஜ்ஜிரவேல், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

Post Top Ad