போக்கு காட்டும் T23 புலி: சுட்டுக்கொலை செய்ய தடை? பரபரப்பில் முதுமலை..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

போக்கு காட்டும் T23 புலி: சுட்டுக்கொலை செய்ய தடை? பரபரப்பில் முதுமலை..!

போக்கு காட்டும் T23 புலி: சுட்டுக்கொலை செய்ய தடை? பரபரப்பில் முதுமலை..!



T23 புலியை சுட்டு கொள்ளும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் அந்த புலியை பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் புலியின் புகைப்படங்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்கொல்லி புலி அடர்த்தியான தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் ட்ரோன் கேமராவும் அங்கு பறக்கவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் ''T23 புலியை உயிருடன் பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதை கண்டுபிடிக்க ட்ரோனை பயன்படுத்துகிறோம் என்றும் முதுமலை பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே, T23 புலியை சுட்டு கொள்ளும் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு கோரப்பட்டுள்ளது. ஆட்கொள்ளி புலி என அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல்,11(1)(a) கீழ் கொடுக்கப்பட்டுள்ள சுட்டுக்கொள்ளும் ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் புலிகள் பாதுகாப்பு ஆணையம் கொடுத்துள்ள வழிகாட்டு முறைகள் அந்த உத்தரவில் பின்பற்றவில்லை என்றும் டெல்லியைச் சேர்ந்த ஆர்வலர் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad