குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது? - தி.மு.க., - எம்.பி., சொன்ன தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 2, 2021

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது? - தி.மு.க., - எம்.பி., சொன்ன தகவல்!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 எப்போது? - தி.மு.க., - எம்.பி., சொன்ன தகவல்!



குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்காததற்கு முந்தைய அ.தி.மு.க., அரசு தான் காரணம் என, தி.மு.க., எம்.பி., டி.ஆர். பாலு குற்றம் சாட்டி உள்ளார்.
அ.தி.மு.க., ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டு சென்றதால், பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தள்ளிப் போடப்பட்டு உள்ளதாக, தி.மு.க., நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு குற்றம் சாட்டி உள்ளார்.

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அய்யப்பாக்கம் ஊராட்சி கரியமாணிக்கம் கோவில் அருகில், கிராமசபை கூட்டம் நடந்தது. அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க.,வைச் சேரந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆட்சியின் போது கொரோனா நிவாரண நிதி மற்றும் தடுப்பூசிகளை தர மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடனேயே தடுப்பூசிகளை மத்திய அரசிடம் இருந்து கேட்டு பெற்றுக் கொண்டதுடன், நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாயையும் வழங்கினார்.ஏற்கனவே இருந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டு சென்று விட்டனர். இதனால் உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படவில்லை. விரைவில் அந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. தற்போது பல்வேறு திட்டங்கள் மூலம் வருவாயை பெருக்கி மக்களுக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.ருத்ர தாண்டவம் திரைப்படம் : இது அரசியில் பிரமுகர்களின் திரைவிமர்சனம்தேர்தல் அறிக்கையில் கூறியபடி பால் விலை, பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு விட்டது. பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சுதந்திரம் பெற்ற நமது நாட்டில் மதுரைக்கு அருகே உள்ள பாப்பாரப்பட்டி கிராமத்தில் உள்ள தலித் மக்கள் சுதந்திரம் இல்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரே சுதந்திரமாக அவர்களால் தற்போது வாழ முடிகிறது. இந்த ஆட்சியில் நேரடியாக சுதந்திரம் யாருக்கு கிடைக்க வேண்டுமோ அவர்களை தேடி சென்று கொண்டிருக்கிறது.

அனைத்து குடும்பத்தினரையும் தன் குடும்பம் போல பாவித்து நடப்பவர் தான் ஸ்டாலின். அய்யப்பாக்கத்தில் ஊராட்சியில் பல்வேறு குறைகள் உள்ளதையும், அவற்றை நிவர்த்தி செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.



No comments:

Post a Comment

Post Top Ad