கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 18, 2021

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை



கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.



அங்குள்ள மழை வெள்ள நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நரேந்திர மோதி, மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆகவும், கோட்டயம் மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஞாயிறு காலையில் தெரிவித்தனர்.

கூட்டிக்கல் மலை கிராமத்தில் மழை வெள்ளத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சேதம் அடைந்த வீடுகளில் இருந்தவர்களை மீட்க இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமன்ட் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரபிக் கடலில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்துக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மழை வெள்ளம் தீவிரம் அடைந்துள்ளது. இங்கு தீவிரம் அடைந்துள்ள மழைப்பொழிவு அசாதாரணமாக கருதப்படுகிறது. காரணம், இது தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவதற்கும் வடமேற்கு பருவமழை தொடங்குவதற்கும் இடையே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் மீட்புப் பணிகள் இரவில் பாதிக்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Top Ad