45 கிமீ சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய DGP சைலேந்திரபாபு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 17, 2021

45 கிமீ சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய DGP சைலேந்திரபாபு!

45 கிமீ சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய DGP சைலேந்திரபாபு!

45 கிமீ சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய DGP சைலேந்திரபாபு!தமிழகத்தின் டிஜிபியாக சைலேந்திரபாபு அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்றிருந்தார் என்பதும் அவரது அவர் பதவி ஏற்ற பிறகு பல ரவுடிகள் ஒடுக்கப்பட்டனர் என்பதும் குற்றச்செயல்கள் தமிழகத்தில் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் சைக்கிளில் சுற்று பயணம் செய்வதில் மிகவும் விருப்பம் கொண்டவர் என்பதும் அவர் பல கிலோமீட்டர்கள் சைக்கிளில் சென்றபோது எடுத்த வீடியோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு 45 கிலோமீட்டர் சைக்கிளில் சென்று அங்கு உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தி காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad