டீசல் திருட அரசு பேருந்து கடத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, October 21, 2021

டீசல் திருட அரசு பேருந்து கடத்தல்!

டீசல் திருட அரசு பேருந்து கடத்தல்!


கர்நாடகாவில் அரசுப் பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 
கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி கொண்டு வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கணிசமாக உயர்த்தி அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் கர்நாடகாவில் அரசுப்பேருந்தை கடத்திச் சென்று டீசல் திருடிய சம்பவம் நடந்துள்ளது. பேருந்தில் இருந்த டீசல் முழுமையாக திருடப்பட்டிருந்தது. டீசலுக்காக பேருந்து கடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறுகின்றனர். கர்நாடகத்தில் டீசல் திருட்டு அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad