கேரளாவில் பாம்பை விட்டு மனைவியை கொன்றவர் சிக்கியது எப்படி?
கடந்த வாரம் கேளராவை சேர்ந்த ஒருவருக்கு மனைவியை பாம்பு கடிக்க வைத்து கொலை செய்த குற்றத்தில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்தது. பிபிசி செய்தியாளர்கள் செளதிக் பிஸ்வாஸ் மற்றும் அஷ்ரஃப் படானா இந்த கொடூர கொலை எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை விளக்குகின்றனர். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 28 வயது சூரஜ் குமார் உலகின் ஆபத்தான விஷப் பாம்பான நல்ல பாம்பை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். இந்தியாவில் பாம்பை விற்பது சட்டவிரோதம். எனவே யாருக்கும் தெரியாமல் பாம்பை விலைக் கொடுத்து வாங்கினார் சூரஜ் குமார். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் காற்று போவதற்காக ஓட்டை போட்டு அதில் பாம்பை வைத்து வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார் சூரஜ். 13 நாட்கள் கழித்து அந்த டப்பவை ஒரு பையில் போட்டுக் கொண்டு 44 கிமீட்டர் தொலைவில் உள்ள தனது மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரின் மனைவி உத்ரா ஏற்கனவே மர்மமான பாம்பு கடி ஒன்றிலிருந்து குணமடைந்து வந்தார். சூரஜ் மற்றும் உத்ரா இரு வருடங்களுக்கு முன் கல்யாண தரகர் மூலம் சந்தித்துள்ளனர். சூரஜின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரின் தாய் இல்லத்தரசி. சூரஜை காட்டிலும் உத்ரா மூன்று வயது இளையவர். உத்ரா கற்றல் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டவர். அவரின் குடும்பம் பணக்கார குடும்பம். அவரின் தந்தை ரப்பர் வியாபாரி. தாய் ஓய்வுப் பெற்ற பள்ளி முதல்வர். சூரஜ் உத்ராவை திருமணம் செய்து கொண்டபோது உத்ரா வீட்டாரிடமிருந்து 768 கிராம் தங்கத்தை (கிட்டதட்ட 96 சவரன்) வரதட்சணையாக பெற்றார். மேலும் சுசுகி செடான் கார் மற்றும் 4 லட்சம் பணத்தையும் பெற்றார். அது மட்டுமல்லாமல் தங்களது மகளை பார்த்து கொள்ள உத்ராவின் பெற்றோர் சூரஜுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் வழங்கி வந்த்தாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment