கனகராஜ் செல்போனில் இருந்த ஆதாரங்கள் என்னென்ன? கொடநாடு வழக்கில் புது அப்டேட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 30, 2021

கனகராஜ் செல்போனில் இருந்த ஆதாரங்கள் என்னென்ன? கொடநாடு வழக்கில் புது அப்டேட்!

கனகராஜ் செல்போனில் இருந்த ஆதாரங்கள் என்னென்ன? கொடநாடு வழக்கில் புது அப்டேட்!



கொடநாடு வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கடந்த அதிமுக ஆட்சியின் போது நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இங்கிருந்து முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவை எங்கே இருக்கின்றன, ஒருவேளை அழிக்கப்பட்டு விட்டதா, இதைச் செய்ய சொன்னது யார் உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தது, எஸ்டேட் கணினி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டது என மர்மங்கள் நீண்டுசூடுபிடிக்கும் விசாரணை

இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்ததை அடுத்து, ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் குறித்த விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி தலைமையில் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சகோதரர் தனபால்,
துருவி துருவி விசாரணை

ஆதாரங்களை அழித்ததாகவும் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருவரையும் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கார் ஓட்டுநர் கனகராஜின் செல்போனில் இருந்த பதிவுகளை அழித்ததாகவும், செல்போனை தீயில் போட்டு எரித்து விட்டதாகவும் தனபால் கூறியிருக்கிறாராம்.
தி.மு.க பொறுப்பாளரை தாக்கிய பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய வேண்டும்:காடேஸ்வரா சுப்பிரமணியம்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சாட்சியங்களை ஏன் கலைத்தீர்கள்? கனகராஜ் செல்போனில் இருந்த ஆதாரங்கள் என்னென்னெ? யாரெல்லாம் கனகராஜ் உடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்? உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பெரும் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad