பெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் எவ்ளோனு செக் பண்ணீங்களா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, October 30, 2021

பெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் எவ்ளோனு செக் பண்ணீங்களா?

பெட்ரோல் விலை: இன்னைக்கு ரேட் எவ்ளோனு செக் பண்ணீங்களா?


சென்னையில் பெட்ரோல், டீசலின் புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.நம்முடைய வாழ்வின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக எரிபொருட்கள் மாறிவிட்டன. அவற்றில் வாகனப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. அதாவது சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

அதிரடியாக உயரும் விலை

இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இந்தப் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.பெட்ரோல், டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவந்தது. தற்போது 100 ரூபாய் தாண்டி வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது.

இன்றைய விலை நிலவரம்

அதன்பிறகு விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் உயர்ந்து ரூ.106.04ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோல்,டீசல் விலையை கொண்டு வர முடியும் : பாஜக புரந்தேஸ்வரி பேச்சு

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி குறைப்பால் 3 ரூபாய் வரை விலை குறைப்பு அமலானது. இதனால் சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad