அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: பாஜக அண்ணாமலை வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 17, 2021

அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: பாஜக அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக பொன்விழா கொண்டாட்டம்: பாஜக அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆனதை அடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று பொன்விழா கொண்டாட்டங்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து ஏற்றினர். அதன்பின் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பொன்விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது என்பதும் அந்த மலரை அதிமுகவினர் வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது டுவிட்டரில் அதிமுகவின் பொன் விழா கொண்டாட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: பொன்மனச் செம்மல் உருவாக்கிய அதிமுக பொன்விழாவை தொடங்கும் நாள் இன்று. தொண்டர்கள் பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் நம்பி 1972ல் தொடக்கம், 1997-ல் நெல்லையில் புரட்சித்தலைவி அமைத்த வெள்ளி விழா.
சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசியத் தலைவர் எல்.கே.அத்வானி அய்யா அவர்கள்! அந்த இரு தலைவர்களின் இருக்கும் பிம்பங்களாக
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கண்களைப் போல கழகத்தை காக்க, பல நூற்றாண்டு காலம் தமிழ் போல் வாழ்க என
பாஜக சார்பில் வாழ்த்துகிறேன்!

No comments:

Post a Comment

Post Top Ad