மாநகராட்சி செம குட் நியூஸ் - சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

மாநகராட்சி செம குட் நியூஸ் - சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை!

மாநகராட்சி செம குட் நியூஸ் - சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை!



2021 - 22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5,000 ரூபாய் வரை ஊக்கத் தொகை பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
2021 - 22 ஆம் ஆண்டிற்கான சொத்து வரியை, அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5,000 ரூபாய் வரை ஊக்கத் தொகை பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
2021 - 2022 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய் துறை மூலமாக சொத்து வரி ரூ. 375.59 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.225.13 கோடி என, மொத்தம் ரூ. 600.72 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் (2020 - 2021) சொத்து வரியில் ரூ.156.41 கோடியும், தொழில் வரியில் ரூ.225.89 கோடியும் என மொத்தம் ரூ.382.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

சொத்து வரியானது கடந்த 5 நிதி ஆண்டுகளின் முதல் அரையாண்டு சொத்து வரி வசூலினை ஒப்பிடும்போது சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்பட்ட நிதி ஆண்டினை தவிர்த்து, இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.மேலும், சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919ன்படி, இரண்டாம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 01.10.2021 முதல் 15.10.2021 செலுத்தி, சொத்து வரியில் ஊக்கத் தொகையாக ஐந்து சதவீதம், அதிகபட்சமாக ரூ.5,000 வரை பெற்று பயன் அடையலாம்.

சொத்து வரியினை 15.10.2021 தேதிக்கு பிறகு செலுத்தும்பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஏப்ரல் 2021ல் 1,16,294 சொத்து உரிமையாளர்ளும், அக்டோபர் 2020ல் 94,900 சொத்து உரிமையாளர்ளும், குறிப்பிட்ட காலத்திற்குள் சொத்து வரி செலுத்தி ஊக்கத் தொகை பெற்று பயனடைந்துள்ளனர்.

2021 - 22 ஆம் நிதி ஆண்டில், சொத்து உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி, ஊக்கத் தொகை பெற, பெருநகர சென்னை மாநகராட்சி, பல்வேறு முறைகளில் சொத்து உரிமையாளர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைளை ஏற்படுத்தி வருகிறது.அசுத்தமான பஸ் ஸ்டாப்; ஒரு மணி நேரத்தில் சுத்தமானது!எனவே, சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, கடன் / பற்று அட்டை / இணையதள வங்கி சேவை / UPI சேவைகள பரிமாற்றக்க கட்டணம் இல்லாமல், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் / கோட்டம் அலுவலகங்களில் அமைந்துள்ள அனைத்து இ - சேவை மையங்களின் முகப்புகளில், வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலம், (காசோலை / வரைவோலை /கடன் / பற்று அட்டை பயன்படுத்தும் வசதி), நம்ம சென்னை மற்றும் பேடிஎம் - கைப்பேசி செயலி மூலம், மற்றும் BBPS -(Bharat Bill Payment System ) போன்ற சேவை அமைப்பு முறை ஆகிய வழிமுறைகள் உபயோகப்படுத்தி சொத்து வரியினை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஊக்கத் தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad