மினரல் வாட்டருக்கு முழு தடை.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

மினரல் வாட்டருக்கு முழு தடை.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

மினரல் வாட்டருக்கு முழு தடை.. மாநில அரசு அதிரடி அறிவிப்பு!



மினரல் வாட்டருக்கு முழு தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில அரசு அறிவிப்பு.பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீருக்கு (மினரல் வாட்டர்) 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக சிக்கிம் மாநில முதல்வர் பி.எஸ்.தமாங் அறிவித்துள்ளார்.

நேற்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிக்கிம் மாநில முதல்வர் பி.எஸ்.தமாங் பேசியபோது, “சிக்கிம் மாநிலம் தூய்மையான, தரமான குடிநீர் வழங்கும் இயற்கை வளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. நம் மாநில மக்கள் அனைவரும் பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை தவிர்க்க வேண்டும்.

2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சிக்கிம் மாநிலத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட மினரல் வாட்டருக்கு தடை அமல்படுத்தப்படும். மினரல் வாட்டர் மீதான தடை அமல்படுத்தப்பட்ட பின் மக்கள் அனைவரும் இயற்கை வளங்கள் வாயிலான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.தொழில் செய்வோரிடம் ஏற்கெனவே கையிருப்பில் இருக்கும் மினரல் வாட்டர் பாட்டில்களை விற்றுத் தீர்ப்பதற்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் மினரல் வாட்டர் பாட்டில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே லாச்சென், வட சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களில் மினரல் வாட்டர் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad