மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்! – அமெரிக்காவில் சாதனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, October 20, 2021

மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்! – அமெரிக்காவில் சாதனை!

மனிதனுக்கு பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம்! – அமெரிக்காவில் சாதனை!

 

  அமெரிக்காவில் மூளை சாவடைந்த மனிதருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையில் பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு மருத்துவமனையில் மூளை சாவடைந்த நபர் ஒருவரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்துள்ளது. இதனால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் நோயாளியின் குடும்பத்தினர் அனுமதியை பெற்ற மருத்துவர்கள் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தியுள்ளனர்.

முதலில் பன்றியின் சிறுநீரகத்தை அவரது ரத்த நாளங்களுடன் பொருத்தி வெளியே வைத்து பாதுகாத்துள்ளனர். பின்னர் மூன்று நாட்கள் அது சரியாக செயல்படுவதை கண்காணித்த பிறகு உடலில் பொருத்தியுள்ளார்கள்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது
.

No comments:

Post a Comment

Post Top Ad