என் பொண்டாட்டிய யாராவது கட்டிக்கோங்க..! – விளம்பரம் செய்த கணவன் கைது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 19, 2021

என் பொண்டாட்டிய யாராவது கட்டிக்கோங்க..! – விளம்பரம் செய்த கணவன் கைது!

என் பொண்டாட்டிய யாராவது கட்டிக்கோங்க..! – விளம்பரம் செய்த கணவன் கைது


குடும்ப தகராறு காரணமாக தனது மனைவிக்கு கணவனே வரன் தேடி விளம்பரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான ஓம் குமார். இவருக்கு சில ஆண்டுகள் முன்னதாக ஜான்சி என்ற பெண்ணுடன் திருமணம் ஆன நிலையில் 4 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடை சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறதுஇதனால் ஓம்குமார் தனது மனைவியை திருமணம் செய்துகொள்ள நல்ல வரன் வேண்டும் என இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். இது ஓம்குமாரின் மாமனாருக்கு தெரிய வர அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் ஓம்குமாரை கைது செய்துள்ளனர். மனைவிக்கு கணவனே வரன் தேடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad