காந்திக்கு அடுத்து தேசத்தந்தைன்னா அது கலாம்தான்! – கமல்ஹாசன் ட்வீட்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, October 19, 2021

காந்திக்கு அடுத்து தேசத்தந்தைன்னா அது கலாம்தான்! – கமல்ஹாசன் ட்வீட்!

காந்திக்கு அடுத்து தேசத்தந்தைன்னா அது கலாம்தான்! – கமல்ஹாசன் ட்வீட்!


இந்திய முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாமின் பிறந்தநாளான இன்று மநீம தலைவர் கமல்ஹாசன் அவர்குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் குடியரசு தலைவரும், இந்தியாவின் விஞ்ஞானிகளில் முக்கியமானவருமாக கருதப்படும் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் அவர் நினைவை போற்றி பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில் அப்துல்கலாம் பிறந்தநாளில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad