மம்தா பானர்ஜி பெரு வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

மம்தா பானர்ஜி பெரு வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மம்தா பானர்ஜி பெரு வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!



பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மேற்குவங்க மாநிலம் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 30ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பவானிபூரில் 57 சதவீதம் வாக்குப்பதிவும், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய தொகுதிகளில் தலா 77 சதவீத வாக்குப்பதிவும் நடைபெற்றது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவர் போட்டியிடுவதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜினாமா செய்தார். அதன்படி, மம்தா பானர்ஜியின் கோட்டையாக கருதப்படும் பவானிபூர் தொகுதியில் அவர் களம் கண்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரிவால் போட்டியிட்டார்.

மேற்குவங்க இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில், 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்எல்ஏவாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், தேர்தல் வெற்றி மூலம் தனது முதல்வர் நாற்காலியை மம்தா பானர்ஜி தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, மம்தா பானர்ஜிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீளமுடியாத நம்பிக்கையை தேர்தல் வெற்றி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad