சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, October 11, 2021

சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு

சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு

நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவர் சாட்டை துரைமுருகன். சீமானைப் போலவே ஆவேசமாக பேசி வெகுவாக கவனம் ஈர்த்தவர்களில் ஒருவர். ஆனால் அவரின் பேச்சே அவருக்கு பலமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மலைகள் அகற்றம் தொடர்பாக நடந்த நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக முதல்வரை தரம்தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து அவர் மீது கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 25 ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் கன்னியாகுமரி கனிமவளக்கொள்ளைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் ‘சாட்டை’ துரைமுருகன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனைவு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே தற்போது சாட்டை துரைமுருகன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பந்தநலூரை சேர்ந்த திமுக பிரமுகர் முருகன் அளித்த புகாரின் பேரில்  சாட்டை துரைமுருகன் மீது தஞ்சை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad