சனிக்கிழமை அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, November 3, 2021

சனிக்கிழமை அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை!

சனிக்கிழமை அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை!

தீபாவளியை தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமே வேலை நாளாக உள்ள நிலையில் அதையும் இணைத்து விடுமுறை வழங்கினால் வெளியூர் பயணிப்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என பலர் அபிப்ராயப்பட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சனிக்கிழமை அன்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad