கோடம்பாக்கத்தை சூழ்ந்த மழை வெள்ளம்! – வேட்டியை மடித்து இறங்கிய எடப்பாடியார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 8, 2021

கோடம்பாக்கத்தை சூழ்ந்த மழை வெள்ளம்! – வேட்டியை மடித்து இறங்கிய எடப்பாடியார்!

கோடம்பாக்கத்தை சூழ்ந்த மழை வெள்ளம்! – வேட்டியை மடித்து இறங்கிய எடப்பாடியார்!

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை, வெள்ளம் பாதித்துள்ள நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றுள்ள நிலையில் அங்குள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாகவும், மக்களின் குறைகளை கேட்டறிவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad