நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்
நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவு வேதனை அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
நடன இயக்குநரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கலை தெரிவித்து
வருகின்றனர்.
இந்நிலையில் நடன இயக்குநர் சிவசங்கரின் மறைவு வேதனை அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தன் நடன இயக்கத்தால் எண்ணற்ற பாடல்களின் வெற்றிக்கு பங்களித்தவர் சிவசங்கர். கொரோனாவிலிருந்து மீண்டு நலமுடன் வருவார் என நம்பியிருந்த நிலையில் அவரது மறைவு அதிர்ச்சி தருகிறது என தெரிவித்துள்ளார்.
மண் வாசனை, திருடா திருடி, மகதீரா, பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ள சிவசங்கர் மாஸ்டர், மகதீரா படத்தில் தீர தீர என்ற பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய
விருதையும் பெற்றுளார்.
No comments:
Post a Comment