டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வின் சம்பளம் இவ்வளவா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 30, 2021

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வின் சம்பளம் இவ்வளவா?

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய சி.இ.ஓ-வின் சம்பளம் இவ்வளவா?

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச்  செயலதிகாரியாக இந்தியாவை  சேர்ந்த பிராக் அகர்வாலின்  ஒரு நாள்   சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

உலகளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும்  சமூக வலைதளம் டுவிட்டர். உலகில் எங்கு என்ன நடந்தாலும் அது நெட்டிசன்களால் கவனத்தில் கொள்ளப்பட்டும் டிரெண்டிங் ஆகிவிடும். உடனே அது பேசு பொருளாகி விடும்.
இந்நிலையில், பலகோடி பேர்களை வாடிக்கையாளர்களாக கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜேக் டோர்சி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார் .அதேசமயம், டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமைச்  செயலதிகாரியாக இந்தியாவை  சேர்ந்த பிராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டுவிட்டரில் புதிய தலைமைச் செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள பிராக் அகர்வாலின் ஒரு நாள்   சம்பளம் ரூ. 2 லட்சத்து  6 ஆயிரம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad