நாய் சேகர் படத்தில் சிவகார்த்திகேயன் - அப்போ படம் பக்கா மாஸ் தான்....!
பிரபல காமெடி நடிகர் சதீஷ் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் நாய் சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா நாயகியாக நடிக்க இருக்கிறார். திகில் மற்றும் காமெடி திரைப்படமான இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின்
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடப்பெறும் "பப்பி" சாங்கிற்கு சிவகார்த்திகேயன் லிரிக் எழுவதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் " நண்பன் சிவகார்த்திகேயன் நார் சேகர் படத்திற்காக பப்பி சாங் எழுதுகிறார். மிக்க நன்றி நண்பா என கூறி பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாவதால் இப்பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்...
Nanban @Siva_Kartikeyan wrote lyric for a peppy song in our#NaaiSekar
No comments:
Post a Comment