சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை- பாமக வழக்கறிஞர் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, November 16, 2021

சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை- பாமக வழக்கறிஞர்

சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை- பாமக வழக்கறிஞர்


சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.

முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ். இதற்கு நடிகர் சூர்யாவும் தனது தரப்பு விளக்கத்தை அளித்துவிட்டார். பின்னர் இந்தப் பட விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்கப்பட்டது.

இந்நிலையில்
ஜெய்பீம் பட இயக்குநர் மற்றும் சூர்யா தரப்பில் இருந்து இன்னும் பதில் வரவில்லை என பாமக வழக்கறிஞர் கே. பாலு பேட்டியளித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: ஜெய்பீம் பட இயக்குநர் மற்றும் சூர்யா தரப்பி இருந்து இன்னும் பதில் வரவில்லை. நஷ்ட ஈடு கிடைக்கப்பெற்றாலதைப் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad