விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? வாகன ஆய்வாளர் மரணம் குறித்து அன்புமணி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, November 22, 2021

விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? வாகன ஆய்வாளர் மரணம் குறித்து அன்புமணி

விபத்தா? அல்லது திட்டமிட்ட கொலையா? வாகன ஆய்வாளர் மரணம் குறித்து அன்புமணி

விபத்தா? அல்லது
திட்டமிட்ட கொலையா? என வாகன ஆய்வாளர் மரணம் குறித்து அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:கரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் அவர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வேன் மோதியது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்!

திருச்சி அருகே ஆடு திருடர்களைப் பிடிக்கச் சென்ற காவல் அதிகாரி பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே அடுத்த நிகழ்வு நடந்திருப்பது கவலையளிக்கிறது. ஆபத்தான சூழலில் பணியாற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்!

No comments:

Post a Comment

Post Top Ad