எடப்பாடி பழனிச்சாமி பலவீனமடைந்துவிட்டார்… டிடிவி தினகரன் கருத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, November 6, 2021

எடப்பாடி பழனிச்சாமி பலவீனமடைந்துவிட்டார்… டிடிவி தினகரன் கருத்து!

எடப்பாடி பழனிச்சாமி பலவீனமடைந்துவிட்டார்… டிடிவி தினகரன் கருத்து!


எடப்பாடி பழனிச்சாமி அரசியல் ரீதியாக பலவீனமடைந்துவிட்டதாக டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தலைமையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அதிமுகவை ஜனநாயகரீதியில் கைப்பற்றுவதுதான் தங்கள் நோக்கம் எனக் கூறியுள்ளார்.

மேலும் ‘சசிகலாவின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு உண்டு. இருவரின் பாதையும் வேறு என்றாலும், அதிமுகவை கைப்பற்றுவதுதான் எங்கள் நோக்கம். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமி பலவீனம் அடைந்து விட்டார். அதனால்தான் அவர் நிதானமின்றி கோபப்பட்டு பேசுகிறார்.அவருக்கு பதவி இருந்தவரை மட்டுமே பலம்.’ எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad