கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 10, 2021

கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை

கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை

கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் பதிவு செய்து அரசின் உதவித்தொகையான ரூ.50 ஆயிரம் பெறலாம்.
இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் பதிவு செய்து அரசின் உதவித்தொகையான ரூ.50 ஆயிரம் வழிமுறை வெளியானது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாண வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் "வாட்ஸ் நியூ (what's new) பகுதியில் "Ex-Gratis for Covid-19" என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகைபெறலாம்.


Notification: Click Here


No comments:

Post a Comment

Post Top Ad