எச்.ராஜாவை கைது செய்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 23, 2021

எச்.ராஜாவை கைது செய்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

எச்.ராஜாவை கைது செய்: திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்





கோவையில் நேற்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 17ஆம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமூக பணித்துறை சார்பாக பெண்கள் உரிமை எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் மற்றும் ஓவியா கலந்து கொண்டு பெண்ணுரிமை குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து நேற்று பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு பாஜக மூத்த தலைவர் எச் .ராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசிய கல்வி கூடங்கள் பயங்கரவாத கூடங்களாக மாறுவதாக கூறியது, SDPI, PFI போன்ற அமைப்புகளை தடைசெய்ய வேண்டும் போன்ற பயங்கரவாத பேச்சுகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது.


இந்த நிலையில் எச் ராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக மதம் மோதலை உருவாக்கும் எண்ணத்தோடு பேசுவதாக பல புகார்கள் எழுந்துள்ளது.

எச்.ராஜாவின் சமூக விரோத பேச்சை கண்டித்து இன்று திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் குறித்தும், சுப வீரபாண்டியன் குறித்தும் அவதூறாக பேசிய எச் ராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். இந்த நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad