மீண்டும் இரவு ஊரடங்கு.. மத்திய அரசு தடாலடி!
இரவு ஊரடங்கு விதிப்பது உள்பட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளுக்கு பரவிவிட்டது. இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள் முழு அலர்ட்டில் இருக்கின்றன.
ஒமைக்ரான் வைரஸ் பூதாகரமாக பரவுவதற்குள் அதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று ஒரு கடிதம்
அனுப்பியுள்ளார்.
இதில், உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமெனவும், தொற்று விகிதம் 10 விழுக்காட்டுக்கு மேல் உயரும் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அல்லது மாவட்ட நிர்வாகங்களே கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உள்ளூர் சூழல் மற்றும் மக்கள் தொகை நிலவரத்துக்கு ஏற்ப கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் அமல்படுத்தலாம் என இக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு கட்டுப்பாடும் குறைந்தது 14 நாட்களுக்காவது அமல்படுத்தப்பட வேண்டுமென மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் அதி வேகத்தில் பரவக்கூடியது என ஏற்கெனவே மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆம்புலன்ஸ், ஆக்சிஜன் போன்ற அவசிய தேவைகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோக, இரவு ஊரடங்கு விதிப்பது, பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது போன்ற ஆலோசனைகளையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment