இனி யாரும் வெளியே போக முடியாது; மொத்தமா லாக்டவுன் போட்ட அரசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 23, 2021

இனி யாரும் வெளியே போக முடியாது; மொத்தமா லாக்டவுன் போட்ட அரசு!

இனி யாரும் வெளியே போக முடியாது; மொத்தமா லாக்டவுன் போட்ட அரசு!



கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, லாக்டவுன் உத்தரவை அரசு அதிரடியாக பிறப்பித்துள்ளது.
சீனாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த சூழலில் அந்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூன்று மாகாணங்களில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஸியான் நகரில் பல்வேறு கட்டங்களாக பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் இரண்டாவது கட்ட பரிசோதனையில் 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் சமூகப் பரவலாக நோய்த்தொற்று பரவி வருகிறது. சீனாவில் இன்று பதிவாகியுள்ள 71 புதிய பாதிப்புகளில் 63 ஸியான் நகரில் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அவசர ஆலோசனை நடத்திய அந்நாட்டு அரசு, 13 மில்லியன் பேரைக் கொண்ட ஸியான் நகரில் முழு ஊரடங்கை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.

ஆனால் எத்தனை நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று குறிப்பிடப்படவில்லை. அதன்படி, பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம். அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் உரிய அனுமதியுடன் வரலாம். இந்த நகருக்கு செல்வதற்கும், வெளியே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர வேறு காரணங்களுக்காக செல்ல வேண்டுமெனில் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இந்த ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் முக்கிய துறைமுக நகரமாக விளங்கும் ஸிஜியாங்கில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே இங்கும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக 2020ல் கொரோனா பரவிய போது 11 மில்லியன் பேரைக் கொண்ட வுஹான் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஸியான் நகரில் தான் இத்தகைய கடுமையாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில்

உலகிலேயே மிகக் கடுமையான ஊரடங்கை சீனா அமல்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டது. ஜீரோ கொரோனா என்ற இலக்கை நோக்கி தீவிரமான பயணக் கட்டுப்பாடுகள், மிகப்பெரிய அளவில் பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விஷயங்கள் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad