பின்வாங்கிய மின்வாரியம்... தடுப்பூசி போடாவிட்டாலும் சம்பளம் !!! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, December 2, 2021

பின்வாங்கிய மின்வாரியம்... தடுப்பூசி போடாவிட்டாலும் சம்பளம் !!!

பின்வாங்கிய மின்வாரியம்... தடுப்பூசி போடாவிட்டாலும் சம்பளம் !!!

கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது என மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கம். 

தடுப்பூசி போடாத ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படாது என மதுரை மண்டலம் மின்வாரிய தலைமை பொறியாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என குறிப்பிட்டிருந்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி. 
அவர் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி போடாதா மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படாது. கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் நிறுத்தம் என சுற்றறிக்கை வெளியான நிலையில் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என மதுரை மண்டல பொறியாளர் உமாதேவி விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad