குழந்தையை தூக்கிய சிறுத்தை; துரத்தி சென்று மீட்ட சிங்கப் பெண்! – மத்திய பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!
மத்திய பிரதேசத்தில் சிறுத்தையை துரத்தி சென்று குழந்தையை மீட்ட தாயின் வீர செயலை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.
மத்திய
பிரதேசத்தின் பரிஜாரியா பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிரண் பைகா. இவருக்கு திருமணமாகி எட்டு வயதில் ராகுல் என்ற மகனும் உள்ளான். காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமமான அதில் சம்பவத்தன்று இரவு 7 மணி வாக்கில் தன் கணவருக்காக வீட்டு வாசலில் காத்திருந்துள்ளார் கிரண். அவரது மகன் ராகுல் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளான்.
திடீரென குழந்தை கத்தும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தபோது சிறுவன் ராகுலை சிறுத்தை ஒன்று வாயில் கவ்வியபடி அங்கிருந்து ஓடியுள்ளது. உடனே சிறுத்தையை துரத்தி சென்ற கிரண் அதனுடன் போராடி குழந்தையை மீட்டுள்ளார். இந்த போராட்டத்தில் சிறுத்தை
தாக்கியதில் குழந்தை ராகுலுக்கும், தாய் கிரணுக்கும் காயங்கள் ஏற்பட்டாலும் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். தாயின் இந்த வீர செயலை மத்திய பிரதேச முதல்வர் பாராட்டியுள்ளார்.
No comments:
Post a Comment