சென்னை அண்ணா சாலையில் இயங்கி வந்த ஓட்டலில் ஆபாச நடனமா? அதிரடி நடவடிக்கை
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டர் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாக தகவல் வெளிவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஓட்டலை சோதனை செய்தபோது அங்கு ஆபாச நடனம் நடப்பது உறுதி செய்யப்பட்டது
இதனை அடுத்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாச்சார நடன நிகழ்ச்சி என்று அனுமதி பெற்று ஆபாச நடனங்கள் நடத்தப்படுவதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்து சோதனை செய்ததில் ஆபாச நடனம் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டதால் சீல் வைக்கப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரி தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment