தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 13, 2021

தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா?

தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையா?

தமிழகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 15ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து ஊரடங்கு நீடிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து வருகிறார் 
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் இன்னும் பரவவில்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது 
குறிப்பாக ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Post Top Ad