2031ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் உறுதி!
2031 ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத தமிழ்நாடு என மாற்றப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று ஆறு மாதம் ஆகியுள்ள நிலையில் இந்த ஆறு மாத காலத்தில் பல்வேறு அதிரடி
நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பொதுமக்கள் மட்டுமின்றி நீதிபதியிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூபாய் 30 ஆயிரம் கோடியில் 9.35 லட்சம் வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழகத்தில் குடிசைகளே இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
வரும் 2031ஆம் ஆண்டுக்குள் குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment