வெங்காயம் விலை கிலோ ரூ.4: பெட்ரோல் ஊற்றி எரித்த விவசாயி!
வெங்காயம் விலை கிலோ ரூ.4க்கு ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்ததால் ஆத்திரமடைந்த விவசாயி ஒருவர் தான் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த டன் கணக்கான வெங்காயத்தை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் வெங்காயம்
விலை கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது
அங்கு உள்ள மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 4 ரூபாய்க்கு தான் வெங்காயத்தை கொள்முதல் செய்வோம் என மொத்த வியாபாரிகள் கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்காயத்தை வேளாண் சந்தைக்கு கொண்டு வந்த விவசாயி ஒருவர் வெங்காய மூட்டைகளை கீழே கொட்டி அதில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். விவசாயி வெங்கடேஸ்வரலு என்பவர் செய்த இந்த சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
No comments:
Post a Comment