அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு - வெளியானது செம சர்ப்ரைஸ்!
yyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது
அரசு ஊழியர்களுக்கு மேலும் 2 அல்லது 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் 31 சதவீத அகவிலைப்படியுடன் நவம்பர் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைத்தது.
28 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 31 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, வீட்டு வாடகைப்படியையும் உயர்த்த, மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலால், மத்திய அரசு ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3 சதவீத அகவிலைப்படி உயர்வு என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், கடந்த 18 மாதங்களாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி பாக்கித் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment