சென்னையில் மீண்டும் ஊரடங்கு?; வந்தது அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

சென்னையில் மீண்டும் ஊரடங்கு?; வந்தது அதிரடி உத்தரவு!

சென்னையில் மீண்டும் ஊரடங்கு?; வந்தது அதிரடி உத்தரவு!



கொரோனா அதிகரித்து வருவதால் சென்னையில் மக்களுக்கு மீண்டும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் முக்கிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்படுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் எடுத்ததை அடுத்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதை அடுத்து ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன.

பொங்கல் தொகுப்பில் பணம் வேண்டும்' ; பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் வாக்குவாதம்!

இந்த சூழலில் கொரோனா நோய் பரவல் சற்று குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டதோடு பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது.


இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் ஒமைக்ரான் என்னும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றின் வேகமும் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக நேற்று (02.02.2022) முதல் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஒமைக்ரான், கொரோனா பரவல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை கடற்கரை மணல் பரப்பில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலையை ஒட்டியுள்ள பிரத்யேக நடைபாதையில் மட்டும் நடைபயிற்சிக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது.

ரவுடி பேபி சூர்யா அவருடைய காதலர் கைது; என்ன காரணம் தெரியுமா?

மணல் பரப்பில் நடைபயிற்சி செய்ய அனுமதி இல்லை. இவ்வாறு சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்.

எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? இல்லையா? என்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad