புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் ‌வாகனங்கள் தடுத்து நிறுத்தம்… தீவிர சோதனையில் போலீசார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் ‌வாகனங்கள் தடுத்து நிறுத்தம்… தீவிர சோதனையில் போலீசார்!

புதுச்சேரியில் இருந்து தமிழகம் வரும் ‌வாகனங்கள் தடுத்து நிறுத்தம்… தீவிர சோதனையில் போலீசார்!


தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் புதுச்சேரி தமிழக எல்லைப் பகுதிகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, கண்ணியகோயில், கனக செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக போலீசார் தீவிர வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி கோரிமேடு எல்லைப் பகுதியில் தமிழக போலீசார் புதுச்சேரி இருந்து வரக்கூடிய வாகனங்களை தடுத்து நிறுத்தி அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். வாகன தணிக்கை செய்வதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருமணம் நிகழ்வு, இறப்பு, பால், காய்கறி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்பவர்களர மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதே போல் தமிழக ஊரடங்கு காரணமாக தமிழக பேருந்துகள் புதுச்சேரிக்கு வராததால் புதுச்சேரி பேருந்துநிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.


No comments:

Post a Comment

Post Top Ad