சிலிண்டர் மானியம் உங்களுக்கு ஏன் வரல? உடனே செக் பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 7, 2022

சிலிண்டர் மானியம் உங்களுக்கு ஏன் வரல? உடனே செக் பண்ணுங்க!

சிலிண்டர் மானியம் உங்களுக்கு ஏன் வரல? உடனே செக் பண்ணுங்க!




மத்திய அரசிடமிருந்து வரும் சமையல் சிலிண்டர் மானியம் உங்களுக்கு வரவில்லையா? காரணம் இதுதான்...
அனைத்து LPG வாடிக்கையாளர்களுக்கும் நல்ல செய்தி வந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மத்திய அரசு ரூ.79.26 முதல் ரூ.237.78 வரை மானியம் வழங்குகிறது. இந்த மானியத் தொகை நேரடியாக வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது.

ஆனால் உங்களுக்கு மானியத் தொகை வரவில்லை என்றால், அது ஏன் என்று முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு சில காரணங்கள் உள்ளன.

காரணம் என்ன?

நீங்கள் சரியான வங்கிக் கணக்கு எண்ணை வழங்காமல் இருந்தால் மானியம் வராது. அதேபோல, உங்களுடைய LPG ஐடியை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருந்தாலும் மானியம் கிடைக்காது.

உங்களுடைய ஆதார் எண் வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்கப்படாததும் காரணமாக இருக்கலாம். அதேபோல, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ளவர்களும் இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

இதற்கு தீர்வுதான் என்ன?

உங்களுக்கு அருகில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தரிடம் இதுகுறித்து நீங்கள் தெரிவிக்கலாம். இது தவிர, டோல் ஃபிரீ எண்ணைத் தொடர்பு கொண்டும் உங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.

உங்களுக்கு மானியப் பணம் வருகிறதா இல்லையா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

செக் பண்றது எப்படி?

என்ற வெப்சைட்டில் சென்று உங்களுடைய LPG ஐடியை உள்ளிடவும்.

நீங்கள் எந்த நிறுவனத்தின் LPG சிலிண்டரைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். அது தொடர்பான விவரங்களையும் பதிவிட வேண்டும்.

அடுத்ததாக, உங்களுடைய 17 இலக்க LPG ஐடியை உள்ளிட்டு மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு ’proceed' கொடுக்க வேண்டும்.

இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அடுத்து உங்களுடைய ஈமெயில் ஐடியை உள்ளிட வேண்டும். பாஸ்வர்டை பதிவிட்டதும், உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, mylpg.in அக்கவுண்டில் உள்நுழைந்து பாப்-அப் செய்தியில் உங்களுடைய விவரங்களை உள்ளிடவும். இப்போது View Cylinder Booking History / Subsidy Transfer என்ற வசதியை கிளிக் செய்யவும்.
இதில் உங்களுக்குத் தேவையான விவரங்கள் இருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad