சாமி தரிசனம் செய்ய இந்த போலீஸ் செஞ்சிட்டு வந்த வேலைய பாருங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

சாமி தரிசனம் செய்ய இந்த போலீஸ் செஞ்சிட்டு வந்த வேலைய பாருங்க!

சாமி தரிசனம் செய்ய இந்த போலீஸ் செஞ்சிட்டு வந்த வேலைய பாருங்க!சமயபுரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய போலி சிபாரிசு கடிதம் கொடுத்து பணம் பார்த்து வந்த ஊர்க்காவல் படையில் பணியாற்றிய வந்தவரை சமயபுரம் போலீசாரால் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த வேம்படியான் மகன் சிலம்பரசன் (34 ).. தமிழ்நாடு ஊர்காவல் படையில் காவலராக சமயபுரம் காவல்நிலையத்தில் இவர் பணியாற்றி வருகிறார்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு வரும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் சமயபுரம் காவல் நிலையம் அல்லாத பிற காவலர்களுக்கு கொடுக்கும் சிபாரிசு கடிதத்தை போலியாக தயாரித்துள்ளார் சிலம்பரசன்.

அதாவது சிபாரிசு கடிதங்களை தானே தயாரித்ததுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கையெழுத்தும், இன்ஸ்பெக்டர் முத்திரை சீலையும் போலியாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த போலி கடிதங்களை வெளியூரிலிருந்து வரும் நபர்களை அழைத்துச் செல்வதற்கு பணம் பெற்று, பயன்படுத்தியதாக கோயில் கண்காணிப்பாளர் சாந்தி, சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் சமயபுரம் போலீஸார் வழக்கு பதி்ந்து சிலம்பரசனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad