ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே திருடன்... தட்டி தூக்கிய போலீஸ்... நடந்தது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே திருடன்... தட்டி தூக்கிய போலீஸ்... நடந்தது என்ன?

ஒரு லட்சம் அபேஸ் செய்த பலே திருடன்... தட்டி தூக்கிய போலீஸ்... நடந்தது என்ன?


மயிலாடுதுறையில் வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த முதியவரின் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.40 லட்சத்தை திருடிச் சென்ற ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபரை மயிலாடுதுறை போலீஸார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாருதி நகரை சேர்ந்தவர் கண்ணப்பன்(75). இவர் கடந்த மாதம் 28-ஆம் தேதி வங்கியொன்றில் ரூ.1.40 லட்சம் பணம் எடுத்துக்கொண்டு வீடு திரும்பும்போது, பின்தொடர்ந்த மர்ம நபர்கள் பணத்தை தவறவிட்டுவிட்டதாகக் கூறி, அவரது கவனத்தை திசை திருப்பி அவரிடமிருந்த பணத்தை திருடி சென்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையம் பகுதியில் நின்றிருந்த வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பதும், கடந்த சில நாள்களுக்கு முன்பு முதியவர் கண்ணப்பனை ஏமாற்றி பணம் திருடிச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜெகதீஷிடமிருந்து திருடப்பட்ட பணத்தை மீட்ட போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததுடன், அவருக்கு உடந்தையாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 3 நபர்களை தேடி வருகின்றனர்.No comments:

Post a Comment

Post Top Ad