பிரதமர் வருகை… சிறுவர்களை பார்த்து திருந்துங்கள் என தமிழிசை அட்வைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

பிரதமர் வருகை… சிறுவர்களை பார்த்து திருந்துங்கள் என தமிழிசை அட்வைஸ்!

பிரதமர் வருகை… சிறுவர்களை பார்த்து திருந்துங்கள் என தமிழிசை அட்வைஸ்!

Indian Coast Guard Recruitment 2021 – Various Store keeper Post | Apply Online


புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் தினவிழாவை துவக்கி வைக்க பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி புதுச்சேரிக்கு வரவுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சிறுவர்களை பார்த்தாவது திருந்துங்கள் எனவும் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சுசிலாபாய் அரசு பெண்கள் பள்ளிகள் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: புதுச்சேரியில் 83 ஆயிரம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தற்போது வரை 454 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மாணவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம்காட்டிIndian Coast Guard Recruitment 2021 – Various Store keeper Post | Apply Online வருவதாக தெரிவித்த தமிழிசை, சிறுவர்களே தைரியமாக தடுப்பூசி போடுகின்றனர். இவர்களை பார்த்தாவது திருந்துங்கள் என்றும், புதுச்சேரியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தினால் மட்டும் தொற்று அதிகரிக்கவில்லை என்றும் நாடு முழுவதுமே தொற்று அதிகரித்து வருவதாகவும், மாநிலத்தில் இன்னும் ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வரும் 12-ம் தேதி பாரத பிரதமர் புதுச்சேரி வருகை தர உள்ளதாகவும், அப்போது தேசிய இளைஞர் திருவிழாவை அவர் துவக்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad