களைகட்டும் பொங்கல்... மார்க்கெட்டில் குவியும் மக்கள்!
திண்டிவனம் அடுத்த வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் உள்ள வீடுர் அணையில் வராக நதி மற்றும் தொண்டி ஆறு ஒன்று சேருமிடத்தில் 1858-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1859-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
வராக நதி மற்றும் தொண்டியாரு முறையே செஞ்சி வட்டம் பாக்கம் மலை தொடரிலிருந்தும், தொண்டூர் ஏரியிலிருந்தும் உற்பத்தியாகி வீடூர் அணையில் ஒன்று சேர்ந்த பிறகு அணையிலிருந்து சங்கராபரணி நதியாக புதுச்சேரியின் அருகே வங்கக்கடலில் கலக்கிறது.
இவ்விரு நதிகளும் வடகிழக்கு பருவமழை காலங்களில் நீரோட்டம் பெறுகிறது. வீடூர் அணையின் மொத்த நீளம் 4,511 மீட்டர், நீர்மட்ட உயரம் 32 அடி மற்றும் முழு கொள்ளளவு, 605 மில்லியன் கன அடிகள் ஆகும். வீடூர் அணையின் பிரதான கால்வாயில் நீளம் 17. 64 கிலோ மீட்டர் மற்றும் 5 கிளை கால்வாய்கள் மூலம் தமிழ்நாட்டில் 2500 ஏக்கர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 1000 ஏக்கர் என மொத்தம் 3,200 ஏக்கர் வீடுர் அணையின் மூலம் பாசன வசதி பெறுகிறது.
வீட்டு உபயோக மின் கட்டணம் உயருகிறது… பொதுமக்களுக்கு ஷாக்!
வீடுர் அனையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கு போதிய அளவு தண்ணீர் இருக்கும் தருவாயில் 135 நாட்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று விவசாய பாசனத்திற்காக வீடூர் அணையிலிருந்து இருந்து தண்ணீரை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ் மஸ்தான் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment