திருவெற்றியூர் கட்டிட விபத்து: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 4, 2022

திருவெற்றியூர் கட்டிட விபத்து: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்!

திருவெற்றியூர் கட்டிட விபத்து: அறிக்கை கேட்கும் மனித உரிமை ஆணையம்!



திருவெற்றியூர் கட்டிட விபத்து தொடர்பாக அறிக்கை அளிக்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது
திருவெற்றியூர் தொகுதிக்குட்பட்ட அரிவாக்குளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 28 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. முன்னெச்சரிக்கையாக, அனைவரும் வெளியேற்றப்பட்டு விட்டதால், உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிந்து தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் வழங்க ஆணையிட்டு அன்றைய தினமே வழங்கப்பட்டது. மேலும், வீடுகளை இழந்த 28 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று இன்றைய தினம் 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக்கொண்டு மாற்று வீடுகளுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 குடும்பங்கள் அந்த இடங்களில் உள்ள பழைய குடியிருப்பினை அப்புறபடுத்திவிட்டு புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பில் வீடுகள் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும், புதிய குடியிருப்பு கட்டடப் பணி முடிந்தவுடன் அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் ஒதுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், திருவெற்றியூர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை செயலாளருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, கட்டிடம் பலவீனமாக உள்ளதாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என குடியிருப்பு வாசிகள் தெரிவித்திருந்தனர்.

திடீரென சாலையில் திரண்டு தமிழ் புலிகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!

இதுசம்பந்தமாக நாளிதழ் செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன், இதுகுறித்து ஆறு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad