அளவுக்கதிகமான தொடர் குடி: படுக்கையிலேயே உடல் அழுகி இறந்த வாலிபர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

அளவுக்கதிகமான தொடர் குடி: படுக்கையிலேயே உடல் அழுகி இறந்த வாலிபர்!

அளவுக்கதிகமான தொடர் குடி: படுக்கையிலேயே உடல் அழுகி இறந்த வாலிபர்!


திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியில் எந்நேரமும் மது போதையில் மூழ்கிய வாலிபர் மரணமடைந்தார். அழுகிய நிலையில் உடலைசமயபுரம் காவல்துறையினர் மீட்டனர்.
திருச்சி மாவட்டம்சமயபுரம் அண்ணாநகர் , மேட்டு தெருவைச் சேர்ந்தவர் செல்வம் இவரது மகன் மாரிமுத்து (30).

இவர் மதுபோதைக்கு அடிமையாகி எப்போதும் மது போதையில் இருந்து வந்துள்ளார். பெற்றோர்கள் எவ்வளவு கூறியும் கேட்காத மனநிலையிலிருந்த இருந்ததால் பெற்றோர்கள் மாரிமுத்துவை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.

இந்நிலையில் வீட்டின் மேல்தளத்தில் பெற்றோர்கள் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் மாரிமுத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அளவுக்கு அதிகமான மது போதையில் தனது தனி வீட்டில் உறங்கியுள்ளார் மாரிமுத்து. இதில் தனியாக இருந்த அவர் மது போதையிலேயே மரணமடைந்தார்.


இன்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அவரது பெற்றோர் உள்ளே சென்று பார்த்த போது அழுகிய நிலையில் மாரிமுத்து சடலமாக கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad