பணக்காரனாக இருந்து போர் அடித்ததால் மீண்டும் வேலைக்கு செல்லும் கோடீஸ்வரர்...
35 வயதில் ஒய்வு பெற்ற பணக்காரர், பணக்காரராக இருந்து போர் அடிப்பதால் மீண்டும் வேலைக்கு செல்ல முடிவு செய்துள்ளார். இது குறித்த முழு தகவல்களை கீழே காணுங்கள்
பிரிட்டனை சேர்ந்த இளைஞர் இளம் வயதில் பணக்காரனாகி ஓய்வு வாழ்க்கைக்கு சென்றவர் பணக்காரனாக இருந்து போர் அடிப்பதாக கூறி மீண்டும் வேலை செய்ய துவங்கியுள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ஒரு நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு டந்த 2014ம் ஆண்டு கிரிப்டோ கரென்சி மீது ஈடுபாடுவந்துள்ளது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதில் முதலீடு செய்ய துவங்கியுள்ளார். அந்த கிரிப்டோகரென்ஸி இவருக்கு நல்ல வருமானத்தை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இவர் ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள எல்லா பணத்தையும் இந்த கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்தார் கடந்த 2017ம் ஆண்டு 20 கோடி அமெரிக்க டாலரை பணமாக எடுத்தார். 2019 ஆண்டு ரூ
62 கோடி லாபம் கிடைத்தது. இந்த பணத்தை வைத்துக்கொண்டு அவரது 35வது வயதிலேயே அவர் ஓய்வு வாழ்க்கையை வாழ துவங்கிவிட்டார்.
ஆனால் 2 ஆண்டுகளில் அவருக்கு பணக்காரராக இருந்து போர் அடித்துவிட்டதாம். அதனால் அவர் மீண்டும் வேலை செய்ய திட்மிட்டு வருகிறாராம். இந்த செய்தி தற்போது வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்
No comments:
Post a Comment