திருடனுக்கு வழக்கறிஞர் கடிதம்; தம்பி..பீரோவ உடைத்து விடாதே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

திருடனுக்கு வழக்கறிஞர் கடிதம்; தம்பி..பீரோவ உடைத்து விடாதே!

திருடனுக்கு வழக்கறிஞர் கடிதம்; தம்பி..பீரோவ உடைத்து விடாதே!



வீட்டில் 2 முறை கொள்ளை நடந்தும் போலீஸ் கண்டுபிடிக்காததால் வக்கீல் நேரடியாக திருடனுக்கே கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
சென்னை கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் காட்வின் (38). வக்கீல். காட்வின் கடந்த 2018ம் ஆண்டு அட்டோபர் மாதம் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று இருந்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீடு உடைக்கப்பட்டு 55 சவரன் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையின்போது கொள்ளையில் ஈடுபட்டவரின் கைரேகை மற்றும் அவரது முகம் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்தது. ஆனாலும் கொள்ளையடித்த ஆசாமி சிக்கவில்லை.இந்நிலையில் மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இவரது வீட்டில் குடியிருந்த ஜான்பால் என்பவரது வீட்டில் பீரோவை உடைத்து, அரை சவரன் மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவத்திலும் திருடனின் முகம் பதிவாகிய கேமரா காட்சிகளும், கைரேகைகளும் கிடைத்தன. ஆனால், உயர் போலீஸ் அதிகாரிகள் வரை சென்றும், இன்று வரை திருடன் பிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலில் காட்வின் கடந்த 28ம் தேதி சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி இருந்தது. அவர் செல்லும் முன்பாக திருடனுக்கு உருக்கமான கடிதம் ஒன்று எழுதி வீட்டு பீரோவில் ஒட்டி உள்ளார்.

அந்த கடிதத்தில், ‘தம்பி பீரோவை உடைத்து விடாதே. எப்படியும் உன்னை போலீசார் பிடிக்க போவதில்லை. சேதாரம் செய்துவிடாதே’ என எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து வக்கீல் காட்வின் கூறியதாவது:

எனது வீட்டில் இரண்டு முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஆனாலும் இதுவரை கொள்ளையனை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் கடந்த 2020ம் ஆண்டு வெளியூருக்கு போகும் முன்பாக சேலையூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பிற்காக கடிதம் கொடுத்தேன்.

ஆனால் போலீஸ் வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை என எழுதி தருமாறு கேட்டனர். அதனால் தான் இந்த முறை போலீசை நம்பாமல் நேரடியாக திருடனிடம் பேசிக்கொள்வோம் என்று முடிவுக்கு வந்தேன். இவ்வாறு வக்கீல் காட்வின் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad