அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு... மாநில அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு... மாநில அரசு அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு... மாநில அரசு அறிவிப்பு!



அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகமாக இருந்ததால் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. அது எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், சென்ற ஜூலை மாதத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் 28 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக அகவிலைப்படி மேலும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது 2021 ஜூலை 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலமாக தங்களது அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. சமீபத்தில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்திருந்தது.

அந்த வரிசையில் தற்போது ஒடிசா மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் டிசம்பர் 31ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதன்படி 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 7.5 ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல், 7ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி நிலுவைத் தொகையில் 30 சதவீதத்தை வழங்கவும் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், 2016 ஜனவரி முதல் 2017 ஆகஸ்ட் வரையிலான நிலுவைத் தொகையில் 50 சதவீதம் வழங்கப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Top Ad